|
அழகப்பபுரம் புனித அந்தோனியார் பங்கு மண்டபம் மேல்
தளத்தில் மரியாயின் சேனை தேவ இரகசிய மாதா பிரசீடியம்
சார்பில் இளையோர் கருத்தரங்கு 28-8-2011 அன்று பிற்பகல்
1 .30 மணிக்கு பங்குத்தந்தை பீற்றர் பால் தலைமையில்
நடைபெற்றது. தூய ஆவி பாடலுடன் தொடங்கிய கருத்தரங்கில்
ஆரம்ப ஜெபம்,ஜெபமாலை ஆகியவை சொல்லப்பட்டன. இதில்
தூத்துக்குடி கொமித்சிய தலைவி பாத்திமா, வள்ளியூர்
கொமித்சிய ஆன்ம இயக்குநர் ததேயுஸ் ராஜன் அடிகளார்,
தலைவி சுந்தரி, துணைத் தலைவி கீவன், உதவி பங்குத்தந்தை
எஸ்.கே.மணி, ஜெரோசின் ஆகியோர் பேசினர். பட்டிமன்றம்
மற்றும் நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றன.
முடிவில் இளையோர் கியூரியா தலைவி பொக்கிஷம் நன்றி
கூறினார். |