|
அழகப்பபுரம் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில்
11-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக
அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா 18-12-2011 அன்று
மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு குமரி
மாவட்ட கலெக்டர் மதுமதி தலைமை
தாங்கினார்.முதன்மைக்கல்வி அலுவலர் ராதாகிருஸ்ணன்
முன்னிலை வகித்தார். பள்ளித்தாளாளர் பீற்றர் பால்
வரவேற்று பேசினார்.வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால்
173 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசினார்
. விழாவில் 10-ம், 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு
சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்களும், கல்வி
ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நாஞ்சில்
முருகேசன் எம்.எல்.ஏ, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்
டாக்டர் கில்மன் புரூஸ் எட்வின்,துணைத்தலைவர் ஜான்
கிறிஸ்டோபர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்
தம்பித்தங்கம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
செயலாளர் மணிகண்டன்,அழகப்பபுரம் பேரூர்
அ.தி.மு.க.செயலாளர் ஸ்டீபன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ
மாணவிகள் கலந்து கொண்டனர். |