|
அழகப்பபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில்
கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களிலும்,
வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு,
வண்ண வண்ண ஸ்டார்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன.
தெருக்களில் வண்ணமயமான மின்விளக்கு அலங்காரம்
செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இயேசு
பாலன் சுரூபம் வைக்கப்பட்டு தெருக்கள் வழியாக
கிறிஸ்துமஸ் பாடல் பவனி (கேரல்)நடைபெற்றது. வீடுகளில்
பலவகையான இனிப்பு பலகாரங்கள், கேக் வகைகள்
தயாரிக்கப்பட்டுள்ளன. 24-ந் தேதி நள்ளிரவு கிறிஸ்தவ
ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு விழா சிறப்புத்திருப்பலி
நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும்
திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். 25–ந் தேதி பகலில்
களியல், விளையாட்டுப் போட்டிகள், இரவில் கிறிஸ்துமஸ்
கனி வழங்குதல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். |