|
அழகப்பபுரம் காமராஜ் தெருவில்
மக்கள் நலத்தொண்டு நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் லிவர்
நிறுவனம் சார்பில் உயிர் காக்கும் இயற்கை மருத்துவ
முகாம் 18-ந் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இதற்கு
மக்கள் நலத்தொண்டு நிறுவனத் தலைவர் எஸ்.கில்மன் புரூஸ்
எட்வின் தலைமை தாங்கினார். செயலாளர் சைலா சுனில்
வரவேற்று பேசினார். மருத்துவ ஆலோசகர்கள் நாகராஜன்,
பாலசுப்பிரமணியன் ஆகியோர் “உணவே மருந்து “என்ற
தலைப்பில் சமச்சீர் உணவு, தண்ணீர் குடிப்பதின் பயன்கள்,
காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்ப்பதன்
பயன்கள், நோய் வராமல் தடுக்க உடற்பயிற்சி மற்றும்
உழைப்பின் அவசியம் பற்றி விளக்கமாக பேசினர்.
பின்னர் குமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் ஆர் .எஸ்.ராஜன்
முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். அழகப்பபுரம் நகர
காங்கிரஸ் தலைவர் தொ.ஞானச்சந்திரன் வாழ்த்துரை
வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,
கொழுப்பு இவற்றிற்கான பரிசோதனை நவீன கருவிகள் மூலம்
செய்யப்பட்டு, அவைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள்
வழங்கப்பட்டன. இதில் ஹிந்துஸ்தான் லிவர் நிறுவன
இயக்குனர் நசீம் இஸ்மாயில், சீனியர் மேலாளர்கள் ஜாண்சன்,
சரவணன், மருத்துவ ஆலோசகர்கள் சிவா, லெட்சுமி மற்றும்
சுய உதவிக்குழு, மக்கள் நலத்தொண்டு நிறுவன
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர்
ஹேமா செல்வகுமார் நன்றி கூறினார்.
|