|
|
|
Azhagaionline News |
|
அழகப்பபுரத்தில் மீன் விலை
உயர்வு |
|
Azhagai 29/06/2011 |
|
கன்னியாகுமரி,கோவளம்,ஆரோக்கியபுரம் கடல் பகுதியில்
கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால்
கடல் சீற்றமும், கொந்தளிப்புமாக காணப்படுகிறது.இதன்
காரணமாக மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டு
உள்ளது.அழகப்பபுரம் மீன்சந்தைக்கு கன்னியாகுமரி,
ஆரோக்கியபுரம் மீன்வியாபாரிகள் வருவது உண்டு.இப்போது
கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக அழகப்பபுரம்
மீன்சந்தைக்கு மீன்வரத்து குறைந்து விட்டது.இதனால்
மீன்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.உதாரணமாக 3
சிறிய வெளமீன்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை
விற்கப்படுகிறது.சாதாரண மக்களால் இவற்றை வாங்க
முடியவில்லை.கருவாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்கள்
இங்கு வருகின்றன.வேறு வழி இல்லாமல் மக்கள் இதை வாங்கி
செல்கின்றனர்.சூறைக்காற்று நின்ற பிறகு மீன் வரத்து
அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
Date : 29/06/2011,
Updated 10.58pm, Author : Azhagaionline team
editor |
 |
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|