|
அழகப்பபுரம் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில்
90-வது ஆண்டு விழா 19-11-2011 அன்று காலை 10 மணிக்கு
நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித்தாளாளர் பீற்றர் பால்
அடிகளார் தலைமை தாங்கினார்.தலைமையாசிரியை விமலா
மெர்லின் மெர்சி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் உதவி
பங்குத்தந்தை எஸ் .கே.மணி, தூத்துக்குடி பங்குத்தந்தை
அருள் குமார், பேரூராட்சித் தலைவர் அசோக்குமார்,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் டாக்டர் கில்மன் புரூஸ்
எட்வின், துணைத்தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், முன்னாள்
தலைமையாசிரியர் ஆர்.எம்.பெருமாள், என்ஜினியர் பிலோமின்
பாலஸ்டர் தாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கடந்த
கல்வியாண்டில் அரசுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ
மாணவிகளுக்கும், 100 சதவீத வெற்றிக்கு உழைத்த ஆசிரிய
ஆசிரியைகளுக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழச்சிகளை ஆசிரியை தொ.
செல்வின் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர்
டி.வின்சென்ட் ராஜன் நன்றி கூறினார்.
|