|
|
|
Azhagaionline News |
|
அழகப்பபுரத்தில் பருவ
காலம் மாற்றம் : வட கிழக்குப் பருவ மழை ஆரம்பம்
-29/10/2011 |
|
Azhagai 29/10/2011 |
|
அழகப்பபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செப்டம்பர்
மாதம் முழுவதும் மற்றும் அக்டோபர் 22-ந் தேதி வரை
கடுமையான வெயில் அடித்தது. கோடை வெயிலை மிஞ்சும்
வகையில் இந்த வெயில் இருந்தது. ஆனால் 23-ந் தேதிக்குப்
பிறகு கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழைக்கான அறிகுறி
தோன்றியது. இந்த நிலையில் அக். 25-ந் தேதி முதல் மழை
பெய்ய ஆரம்பித்தது. அவ்வப்போது சாரல் மழை போன்று சிறு
தூறலாகவும், சில நேரங்களில் இடி முழக்கத்துடன் சுமாரான
மழையாகவும் பெய்கிறது. கடந்த சில நாட்களாக வானம்
மப்பும் மந்தாரமுமாக இருந்து சூரியனைக் காண முடியாமல்
இதமான சூழ்நிலை நிலவுகிறது. இரவு நேரம் கடும் குளிராக
இருக்கிறது. இனி நவம்பர் மாதம் இறுதி வரை தமிழ்நாடு
முழுவதும் புயல் மழைக்காலமாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
Date :
29/10/2011,
Updated 8.27am, Author : Azhagaionline team
editor |
|
|
|
|
|
Job opportunity |
 |
|
Live TV |
 |
|
Our websites |

 |
|
Azhagaits in Kuwait |
 |
|
Azhagaits in Dubai |
 |
|
Azhagai ester photos |
 |
|
Friendship builder |
 |
|