|
அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புத்தாண்டு
விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு
பங்குத்தந்தை பீற்றர் பால் தலைமை தாங்கினார். உதவி
பங்குத்தந்தை எஸ்.கே. மணி, புனித அந்தோனியார்
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி லூ.கோர்தலா
ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி வழங்கினர். மாணவ
மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அழகப்பபுரம் சீயோன் வாசல் சபை ஊழியம் சார்பில்
புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சபை
போதகர் எஸ்.ஏ.ராஜன் தலைமை தாங்கினார். இதில்
அழகப்பபுரம் பேரூராட்சித் தலைவர் அசோக்குமார் கலந்து
கொண்டு நல உதவிகள் வழங்கினார். ஆசிரியர் மிக்கேல்
ராஜன் நன்றி கூறினார்.
அழகப்பபுரத்தை அடுத்த பொட்டல்குளம் சி.எஸ்.ஐ.ஆலயத்தில்
புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி புத்தாண்டு
தொழுகை, விளையாட்டுப்போட்டி, பரிசளிப்பு, கலைநிகழ்ச்சி
ஆகியவை நடைபெற்றன. விழாவில் சபை ஆயர் ஜே.நேசபிரின்ஸ்
செயலாளர் ஏ.சாம் சாமுவேல் தாஸ், பொருளாளர்
ஏ.சுவாமிதாசன், கணக்கர் ஐ.சாம் ஆஸ்டின் தாஸ்,
உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர். |