|
அழகப்பபுரம் கோவில் தெருவில் பிரசித்திப் பெற்ற குழந்தை
இயேசு குருசடி உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா
5-1-2012 அன்று தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும்
இரவு 7.15 மணிக்கு நவ நாள் ஜெபம், பிரார்த்தனை, குழந்தை
இயேசுவுக்கு விசேஷ ஜெபம், பாடல்கள் ஆகியவை நடைபெறுகிறது.
14-ந் தேதி காலை 5 மணிக்கு புனித அந்தோனியார் ஆலயத்தில்
திருப்பலியும், மாலை 5 மணிக்கு குழந்தை இயேசு
குருசடியில் திருவிழா சிறப்பு ஜெபமும், இரவு 7 மணிக்கு
அசனவிருந்தும் நடைபெறுகிறது. அசனவிருந்தை பங்குத்தந்தை
பீற்றர் பால் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை
குழந்தை இயேசு குருசடி நிர்வாகக் குழுவினர்
செய்துள்ளனர். |