|
அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருக்குடும்ப
சபை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பங்குத்தந்தை
பீற்றர் பால் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை மற்றும்
திருப்பலி நடைபெற்றது. மாலை ஆராதனையின் போது சபையில்
புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சபை தலைவியாக ஜோஸ்பின் மேரி, துணைத்தலைவியாக
மல்லிகா எம்பரர், செயலாளராக ஜெசிந்தா மஸ்கிரீன்,
பொருளாளராக செல்வி, ஆலோசகர்களாக தங்கராணி, கனகாஜார்ஜ்,
அமுதா, மேரி அரசரெத்தினம், செல்வராணி மார்க் ரெக்ஸ்லின்
ஆகியோர் பொறுப்பேற்றனர். |